தமிழ்நாடு

அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் - அமைச்சரின் அலட்சிய பதில் !

மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால் பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என அமைச்சர் தங்கமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் - அமைச்சரின் அலட்சிய பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரின்ஸ், மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளது. அதைக் குடிப்பதால், சிறுநீரக கோளாறுகள் வருவதாகவும், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, '' உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால், கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதாலேயே, படிப்படியாக, மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், 6 ஆயிரத்து 132 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 152 கடைகளாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும். தங்களால் ஒன்றும் செய்ய முடியாது'' என்றார். மேலும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதியம் ரூ. 2,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

banner

Related Stories

Related Stories