தமிழ்நாடு

பள்ளிக்கூட பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் மாணவர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

பள்ளிக்கூட பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளியம்பலம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளிக் கட்டிடம் பல ஆண்டுகளாக சேதாரத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென்று இன்று காலை பால்கனி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மாணவர்கள் சக்திவேல், குமரவேல், வீரக்குமார் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று மாணவர்களும் தலை மற்றும் கால் பகுதியில் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிக்கூட பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்!

இந்த விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விளக்குத்தூண் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories