தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வெப்ப அலை வீச இருப்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை மையம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிய முதல் ஒரு வார காலத்துக்கு மட்டும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நெல்லை, தேனி போன்ற பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பின்னர் வாயு புயல் உருவானதால் பருவமழையும் இல்லாமல் போனது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, வேலூர், நாகை, மதுரை, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலையும், அனல் காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories