தமிழ்நாடு

பிளாஸ்டிக் உற்பத்தி செய்தால் ரூ.3 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி உத்தரவு!

பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்தி செய்தால் ரூ.3 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படாமல் இருந்தது. அனால், நாட்கள் செல்லச் செல்ல ப்ளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி வரும் திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூபாய் 1 லட்சம், மீண்டும் செய்தால் ரூபாய் 2 லட்சம் மூன்றாவது தடவையும் செய்தால் ரூபாய் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் . மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.

அதேபோல தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கையிருப்பு வைத்திருந்தாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் சென்றால் முதல் தடவை ரூபாய் 25 ஆயிரம் அடுத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அவ்வாறு செய்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நடுத்தர வணிக நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ஆயிரம் முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சிறு குறு நிறுவனங்கள் விற்றால் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்பிறகும் இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இந்த அபராதங்களை விதிப்பதற்கு வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அபராதம் வசூலிப்பு முறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories