தமிழ்நாடு

கேள்விக்குறியாகிறது தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு!

நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களில் வெறும் 10 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர முடியும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேள்விக்குறியாகிறது தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 5ல் வெளிவந்தன. தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில், 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்ச்சியடைந்த 2 ஆயிரம் மாணவர்களில் 3 பேர் மட்டுமே 400க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். 300க்கு மேல் 29 மாணவர்கள் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், 453 மார்க் எடுத்த மாணவிக்கு மருத்துவ சீட் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், 440 எடுத்த மாணவருக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையிலும், 404 மார்க் எடுத்த மாணவருக்கு சுயநிதி கல்லூரியிலும் சீட் கிடைக்க உள்ளது.

300 மார்க் எடுத்த 3 மாணவ, மாணவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டின் கீழும், 250க்கு மேல் எடுத்துள்ள ஓரிரு பேருக்கு மருத்த இடம் கிடைக்கவுள்ளதாக தெரிகிறது.

எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் வெறும் 10 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்து போயுள்ளது.

banner

Related Stories

Related Stories