தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டாம் தாளை எழுத 4 லட்சம் பேர் பங்கேற்பு!

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நேற்றைய தினம் முதல்தாள் முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாம் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டாம் தாளை எழுத 4 லட்சம் பேர் பங்கேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆசிரியர் தகுதி தேர்வானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இன்று இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது. நேற்றைய தினம் நடந்த முதல் தாளானது 5ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கானது. இரண்டாம் தாளானது 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில் 1.83 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இன்றையதினம் நடைபெறும் இரண்டாம் தாளை சுமார் 4.28 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வானது தமிழகம் முழுவதும் 1081 மையங்களில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேர்வானது தொடங்க உள்ளது. காலை 9 மணி முதலே தேர்வு எழுத உள்ள ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து விட்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 4.28 லட்சம் பேர் இந்த ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதுகின்றனர். நேற்றைய தினம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில் 1.83 லட்சம் பேர் எழுதி இருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வு 10 மணிக்கு தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் 471 மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று 1081 மையங்களில் நடைபெறுகிறது.

தேர்வு எழுத உள்ள ஆசிரியர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்விற்காக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வானது கண்காணிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories