தமிழ்நாடு

90% பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம் : தடுப்பணைகள் கட்ட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சென்னை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் 90% பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

90% பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம் : தடுப்பணைகள் கட்ட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்த சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். மாநில அரசு தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யப் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து நாட்களுக்கு ஒருமுறை, மிக குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது. சென்னை மாநகரில் மாநகராட்சி தண்ணீர் விநியோகம் 90% பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது என அதில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

90% பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம் : தடுப்பணைகள் கட்ட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நிரந்தர திட்டங்களை வகுத்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், பாசன வடிகால் வாய்க்கால்களை சிறப்பு நிதி ஒதுக்கி தூர்வாரிட வேண்டும். மாநகர் முதல் கிராமங்கள் வரையில் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள மேற்கொள்ளவேண்டும்.

மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்க்க தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories