தமிழ்நாடு

கிரண்பேடியின் உயர்நீதிமன்ற வழக்கிற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் சிறப்பு அதிகாரம் தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கிற்கு, இடைக்கால தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிரண்பேடியின் உயர்நீதிமன்ற வழக்கிற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை, ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தரப்பில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது, மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத்தடை கோரிய கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் கூறியதாவது, "உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை வழக்கில் சேர்க்கவும் நீதிபதி ஆர்.,எம். ஷா உத்தரவிட்டார். துணை நிலை ஆளுநர் தலைமையில் 7-ம் தேதி நடக்க இருந்த கேபினட் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்த தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories