தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!

சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால், 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள துலுக்கன் குறிச்சி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை பணி தொடங்கும்போது, ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், கெமிக்கல் கலவையில் ஏற்பட்ட உராய்வால் விபத்து நிகழ்ந்துள்ளது.

அப்போது கெமிக்கல் எடுப்பதற்காக அறைக்கு சென்ற தொழிலாளர்கள் முருகேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories