தமிழ்நாடு

+2 தேர்வில் 100 மார்க் எடுத்தவர்க்கு 27 மார்க் : தவறு செய்த 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாள்களைத் நிறுத்துவதில் தவறு ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து 500 ஆசிரியர்களுக்கு தேர்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

+2 தேர்வில் 100 மார்க் எடுத்தவர்க்கு 27 மார்க் : தவறு செய்த 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாள்களைத் திருத்துவதில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் மதிப்பெண்களை கூட்டுவதில் இந்த தவறு நிகழ்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

12ம் வகுப்பு மாணவர் எழுதிய பொதுத் தேர்வு வினாத்தாள்களை திருத்துவதற்கு மாநிலம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுள்ளனர். மொத்தம் 60 லட்சம் விடைத்தாள்களை அவர்கள் திருத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வினாத்தாள்கள் திருத்தி மதிப்பெண்ணை கூட்டும்போது, கூட்டுவதில் தவறு செய்துள்ளனர் என தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டள்ளது.

வினாத்தாள்களை மாணவர்கள் கேட்டு மதிப்பெண்கள் குறித்து ஆய்வு செய்ய உரிமையுள்ளது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில், வினாத்தாள்களை சரிபார்க்க 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்ததாகவும் தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், 72 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் வெறும் 27 மதிப்பெண் மட்டுமே எடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுபோல தவறுகள் அதிகம் செய்த 500 ஆசிரியர்களுக்கு கண்டுபிடித்து விளக்கம் கேட்டு தேர்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விடைத்தாள் திருத்துவதில் இப்படியாக தவறு நடந்துள்ளதால் பல மாணவர்கள் மொத்த மதிப்பென் குறைந்திருப்பதால், அவர்கள் நினைத்தக் கல்வியை பெற முடியாத சூழல் எற்பட்டுள்ளது. இதற்கு பள்ளி இயக்குநரகம் முழுப்பெறுப்பெற்க வேண்டும் என கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories