தமிழ்நாடு

39 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க வசம் பொள்ளாச்சி!

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 39 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க வெற்றி வாய்ப்பை பெறுகிறது.

தேர்தல் பரப்புரையில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தேர்தல் பரப்புரையில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 542 தொகுதிகளுக்கு நடந்தது முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், கலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மே 19-ம் தேதி தேர்தல் வாக்கு முடிவடைந்தது. இந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பில் சண்முக சுந்தரமும், அதிமுக சார்பில் மகேந்திரனும் போட்டியிட்டனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 18வது சுற்று முடிவில் தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,48,967 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இதையடுத்து 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க நேரடியாக வெற்றி முகம் பதிக்கிறது. கடந்த 1980-ம் ஆண்டு தி.மு.க வேட்பாளர் சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார். இதன்பின் 1996-ல் தி.மு.க கூட்டணியில் த.மா.கா வெற்றி பெற்றுள்ளது.

பின்னர் 1999ம் ஆண்டும் 2004ம் ஆண்டுத் தேர்தலில் ம.தி.மு.க வென்றது. இதன் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அ.தி.மு.கவே வெற்றிபெற்றிருந்தது. தற்போது, மீண்டும் 39 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க-வின் வசம் பொள்ளாச்சி தொகுதி வர உள்ளது.

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தின் எதிரொளியாக மக்கள் அ.தி.மு.க வை துடைத்து எறிந்துள்ளனர். இளம் பெண்களிடம் ஆசைக்காட்டி பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதரவேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்தார். தி.மு.க சார்பில் எம்.பி கனிமொழி தலைமையில் அங்கு கண்டன போரட்டம் நடைபெற்றதும் குறிபிட்டத்தக்கது.

banner

Related Stories

Related Stories