தமிழ்நாடு

தமிழகத்தின் தலைநகரை கைபற்றிய தி.மு.க : சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை!

சென்னை உள்ள 3 மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் அகியோர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரை கைபற்றிய தி.மு.க : சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், கலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மே 19-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து. அதனை தொடர்ந்து தற்பொழுது வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

குறிப்பாக தலைநகர் சென்னையைக் கைப்பற்றியது தி.மு.க வடசென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி 2,13,922 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்.

மத்திய சென்னையில் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறன் 1,99,244 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள்.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 1,05,380 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

banner

Related Stories

Related Stories