தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை: தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு!

தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நாளை மறுநாள் நாடுமுழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்புக் கோரி தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை: தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததை முன்னிட்டு நாளை மறுநாள் நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது,

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள வாக்கு எண்ணுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் இருப்பதற்கான போதிய இடம் இல்லாததால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலபடுத்த வேண்டும் எனவும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள், வாக்குகள் தொடர்பாக குறித்து வைத்துக்கொள்வதற்கான படிவம் 17-சி உடன், பென்சில் போன்றவை முகவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையர் செவி மடுத்திருப்பதாகவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்த்தார்.

banner

Related Stories

Related Stories