தமிழ்நாடு

வரும் கல்வியாண்டில் அங்கீகாரமில்லாத 700 பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்!

தமிழகம் முழுவதும் அங்கீகாரமில்லாமல் செயல்பட்டு வரும் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது வரும் கல்வியாண்டு முதல் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் அங்கீகாரமில்லாத 700 பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் பல தனியார் பள்ளிகளில் அரசு வெளியிடும் ஆணைகளை முறையாக பின்னபற்றவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 23 தேதி பள்ளிக்கல்வி துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகாரமின்றி செயல்படவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் 4382 தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எல்கேஜி முதல் ஆறாம் வகுப்பு வரை, எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை, எல்கேஜி முதல் 10-ம் வகுப்புவரை என பல்வேறு பிரிவுகளில் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. தொடர் அங்கீகாரம், ஆண்டுதோறும் புதுப்பிக்கும் அங்கீகாரம் என இரு பிரிவாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருப்பூர் 86, சேலம் 53, திருவள்ளூர் 48, சென்னை 7 என தமிழகம் முழுவதும் மொத்தம் 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர். இந்த பள்ளிகளை மூட மே 23 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories