தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் எடுக்க நினைத்தால் திருவாரூர் போராட்ட களமாகமாறும்: போராட்டக்குழு எச்சரிக்கை!

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனைத்து பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி தீவிரமான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என அனைத்து கட்சி விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க நினைத்தால் திருவாரூர் போராட்ட களமாகமாறும்: போராட்டக்குழு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவாரூர் மாவட்டத்தில ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாசயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும், திருவாரூர் மாவட்டத்தில் 16 கிராம ஊராட்சிகளிலும் டைட் காஸ் எடுக்கப்போவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றன. அணைத்து சங்ககளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் மாதத்தில் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது;" திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் முதல் கட்டமாக போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி ஜூன் மாதத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான போராட்டக்குழுக்களை திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாரியாக நியமிக்கத் திட்டமிட்டு அதற்கான முதல் கூட்டம் தற்போது நடத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க நினைத்தால் திருவாரூர் போராட்ட களமாகமாறும்: போராட்டக்குழு எச்சரிக்கை!

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி நாம் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில் அதனை கருத்தில் கொள்ளாது டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்த சூழல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மூர்க்கதனமாக முயற்சிக்கிறது. அரசியல் கட்சிகள், விவசாயிகள், சேவை சங்கங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது. மீண்டும், மீண்டும் ஏல அறிவிப்பு செய்து எப்படியாவது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வஞ்சகமாக முயற்சி எடுக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

எக்காரணம் கொண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மத்திய, மாநில அரசுகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தைக் கையாண்டதைப் போல் திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் அப்படி செய்து விடலாம் என்று மத்திய, மாநில அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் பலிக்காது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனைத்து பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி தீவிரமான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம், மக்களின் உணர்வை புரிந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும் திட்டத்தைத் தொடர நினைத்தால், திருவாரூர் மாவட்டம் போராட்ட களமாகமாறும். என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories