தமிழ்நாடு

பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்த கோரிக்கை: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொறுத்துவது தொடர்பான மனுவில் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்த கோரிக்கை: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொறுத்த சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவையில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகன ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் பொருத்த வேண்டும்.

மேலும் மாணவர்களின் வாகனங்களில் பயணிக்கும் போது பெற்றோர்கள் இணையதளம் மூலமாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.

மனுதாரர் தரப்பை கேட்டறிந்த நீதிபதிகள், இது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories