தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கைக்கான சிறப்பு பயிற்சி தமிழகத்தில் துவக்கம் !

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தலைமையில் வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி வகுப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கான சிறப்பு பயிற்சி தமிழகத்தில் துவக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தலைமையில் முகாம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளின் வாக்கு எணிக்கை பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சி முகாமில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி, இணைத் தேர்தல் அலுவலர் ஜேக்கப் மற்றும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கோவிந்தராவ் ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரம் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளுக்கான ஒப்புகை சீட்டு இயந்திரங்களை எண்ண வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதோடு சேர்த்து 43 வாக்குச் சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட உள்ளதால் தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories