தமிழ்நாடு

அகவிலைப்படி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம்!

நிலுவையில் உள்ள 3% அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்லாயிரக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகவிலைப்படி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவிகித அகவிலைப்படி நிலுவையில் உள்ளதால் அதனை தரக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான 3% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், மாநில அரசும் அகவிலைப்படி வழங்குவது வழக்கம்.

இதுவரை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியாகவில்லை. இதனை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை, 4 மாதங்களுக்கான 3% அகவிலைப்படி உயர்வு தொகையை, ரொக்கமாக பெற்றுக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பல்லாயிரக் கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன்,

மத்திய அரசு ஊழியர்களுக்கான் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தும், தமிழக அரசு வழங்காமல் இருக்கிறது. இது குறித்து கேள்வி எழுப்பினால், தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் அகவிலைப்படி உயர்வு வழங்க முடியாது என சாக்கு சொல்கிறார்கள். உண்மையில் தேர்தல் விதிமுறைகளுக்கும் அகவிலைப்படி வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories