தமிழ்நாடு

1.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாக்கு மறுப்பு? : எதிர்க்கட்சிகள் சந்தேகம் !

தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 1.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாக்கு மறுப்பு? : எதிர்க்கட்சிகள் சந்தேகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாடு முழுவதும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக அரசு ஊழியர்கள் பெரும்பாலோனோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குத் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். தபால் வாக்களித்த 92 ஆயிரத்து 292 பேரின் வாக்குகள் இதுவரையில் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தபால் வாக்கு கிடைக்காமல், இடிசி மூலமும் வாக்களிக்காதோரின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 718 பேர் ஆகும். இதன்மூலம், சுமார் 1.50 லட்சம் அரசு ஊழியர்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.

நாள்தோறும் வரும் அஞ்சல் வாக்குகள் விவரங்களை தேர்தல் மைய தகவல் பலகையில் வெளியிட வேண்டும். ஆனால், நிராகரிக்கப்பட்டோர் எத்தனை பேர், தபால் வாக்கு அளித்தோர் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாக்குகளில் ஆளும்கட்சி எதேனும் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories