தமிழ்நாடு

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! அரியர் முறை பற்றியும் அறிவிப்பு

2018-19ம் ஆண்டுக்கான ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! அரியர் முறை பற்றியும் அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் சுமார் 8 லட்சத்துக்கும் மேலான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.

இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை (மே 8) வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் காணமுடியும்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது அரியர் தேர்வாக மாணவர்கள் எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories