தமிழ்நாடு

பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என விடுவிப்பு!

J Francis Kiruba
J Francis Kiruba
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை கோயம்பேட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர், கவிஞர் பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என போலீசாரால் விடுவிக்கப்பட்டார்.

வணிகர் தினத்தையொட்டி நேற்று கோயம்பேட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்து கிடப்பதாகவும், அதற்கருகில் ஒருவர் அமர்ந்திருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று நண்பகலில் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பிவிட்டு, அருகில் அமர்ந்திருந்தவர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் கைது செய்தது காவல்துறை. கைது செய்யப்பட்டவர் 'கன்னி’ நாவல், ‘மல்லிகைக் கிழமைகள்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’ உள்ளிட்ட புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகளையும் எழுதிய பிரான்சிஸ் கிருபா ஆவார்.

பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என விடுவிப்பு!

காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், வலிப்பு ஏற்பட்டு துடித்துக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை தன் மடியில் வைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வர பிரான்சிஸ் கிருபா முயன்றது தெரியவந்துள்ளது.

பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என விடுவிப்பு!

இறந்தவரின் உடற்கூராய்வு முடிவுகளும் அவர் வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்ததையடுத்து கவிஞர் பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார்.

banner

Related Stories

Related Stories