இந்தியா

3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிராவில் கடந்த 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க  கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இவ்வாண்டு ஜூனவரி முதல் மார்ச் மாதம் வரை கடந்த 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலை மாநில அமைச்சர் மக்ரந்த் பாட்டீல் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். மேற்கு விதர்பாவில் - யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் ஆகிய பகுதிகளில் 257 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதேபோல் ஹிங்கோலி மாவட்டத்தில் 24 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களால் பயிர்கள் சேதமடைந்ததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் பற்றி மோடி அரசுக்கு கவலை இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி MP விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் 3 மாதங்களில் தற்கொலை செய்திருக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் கடன், பாழாகும் பயிர், உரம், விதைகள், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு போன்றவை விவசாயிகளின் கழுத்தில் சுருக்காக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மோடியோ கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்கிறார்" என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories