தமிழ்நாடு

வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்: மெட்ரோ ஊழியர்கள் அறிவிப்பு!

3 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் ஊழியர்கள், கோரிக்கையை நிர்வாகம் ஏற்றதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்: மெட்ரோ ஊழியர்கள் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் இணைந்து பணியாளர் சங்கம் ஒன்றை தொடங்கினர். இதனால் அவர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இதனையடுத்து மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதனால் மெட்ரோ ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும், சென்னை மெட்ரோ ரயில் சேவையின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வெளிநபருக்கு வழங்குவதை எதிர்த்தும், அதிக நேரம் பணிசெய்யுமாறு கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும், ஊதிய உயர்வு வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மெட்ரோ ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்: மெட்ரோ ஊழியர்கள் அறிவிப்பு!

இந்த வேலை நிறுத்தத்தால் “சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் 36 ரயில்கள் இயங்கவேண்டிய இடத்தில் 6 ரயில்கள் மட்டுமே இயங்கியது. 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் நிலைமை மாறி 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது". மெட்ரோ தொழிலாளர்களின் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மெட்ரோ ஊழியர்களுடன் நேற்று சென்னை குறளகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2வது கட்டமாக நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஐடியு மெட்ரோ சங்கம் முன்வைத்த கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தொழிலாளர்கள் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது; ‘பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் முறையீடுவார்கள். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் திரும்பப் பெறபடுகிறது. என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories