தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம் : சிபிஐ வசம் ஆவணங்களை ஒப்படைத்தது சிபிசிஐடி!

பொள்ளாச்சி விவகாரம் : சிபிஐ வசம் ஆவணங்களை ஒப்படைத்தது சிபிசிஐடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கு, விசாரணைக்காக கடந்த 12-ம் தேதி சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சில நாட்களிலேயே இவ்வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடி போலீசாரிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

பொள்ளாச்சியில் சி.பி.ஐ அதிகாரிகள் ரகசியமாக பொதுமக்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் தங்களது விசாரணையைத் துவக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 7 ஆண்டுகளாக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரச்னையின் மையப்புள்ளியிருந்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளையும் சிறப்பு அனுமதி பெற்று சிறைக்குள்ளேயே சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

CBCID handovers files to CBI
CBCID handovers files to CBI

சிபிசிஐடி அதிகாரிகள் ஏற்கெனவே குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தி அங்கிருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக பாதிக்கப்பட்டோரும், பொதுமக்களும் கருதுகின்றனர். மக்களின் அதிருப்தியைக் கடந்து சிபிஐ இந்த வழக்கில் நேர்மையாகச் செயலாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

banner

Related Stories

Related Stories