தமிழ்நாடு

ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்துள்ளார் - தலைமை தேர்தல் அதிகாரி

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தது தெரியவந்துள்ளது. 

ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்துள்ளார் - தலைமை தேர்தல் அதிகாரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஆனால், சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தார் என்று சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய வாக்குச்சாவடி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார்.

இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்துள்ளதாக சத்யபிரதா சாஹூ தற்போது தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories