
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இப்படியான ஒரு போட்டியை ரசிகர்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டார்கள். 2 அணியிலும் இருக்கும் ஒவ்வொரு வீரரும் வெற்றிக்காக போராடியதை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கக்கூடிய அளவில் ஒரு தரமான போட்டியை தென்னாப்பிரிக்காவும், ஆப்கானிஸ்தான் அணியும் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 11) பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா பேட்டர்கள் டிகாக் 59 ரன்களும், ரிக்கல்டன் 61 ரன்களும் அடித்தனர்.
188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களான குல்பதீன் நைப் மற்றும் செடிகுல்லா அடல் இருவரும் 0 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
கடைசியாக வந்த ஓமர்சாய் 22 ரன்களும், கேப்டன் ரஷீத் கான் 20 ரன்களும் அடிக்க கடைசி ஓவரில் 6 பந்துக்கு 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஆப்கானிஸ்தானுக்கு உருவானது. தென்னாப்பிரிக்கா அணியில் கடைசி ஓவரை வீசிய ரபாடா 2 நோ பால்களை வீச, நூர் அகமது அபாரமான சிக்சர் ஒன்றை அடித்தார். இதனைத் தொடர்ந்து 5 பந்தில் 12 ரன்களை விளாசியது ஆப்கானிஸ்தான். கடைசி பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி நிலையில், ஒரு ரன் எடுக்க ஓடியபோது நான் ஸ்ட்ரைக்கில் இருந்த ஃபசல்ஹாக் ஃபரூக்கி ரன் அவுட்டாகி சொதப்பினார். இதனால் இரண்டு அணிகளும் 187 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

விறுவிறுப்பாக தொடங்கிய முதல் சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி பந்துவீச, ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்மத் மற்றும் குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து 2 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 17 ரன்களை அடித்தனர்.
18 ரன்கள் அடித்தால் வெற்றி என்று விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் மில்லர் மற்றும் பிரேவிஸ் களமிறங்கினர். பிரேவிஸ் ஒரு சிக்சர் அடித்து அவுட்டாக 3 பந்தில் 7 ரன்களை மட்டுமே அடித்திருந்தது தென்னாப்பிரிக்கா. அதன்பின் களத்திற்கு வந்த ஸ்டப்ஸ் ஃபரூக்கி வீசிய 4வது பந்தில் பவுண்டரிக்கு விரட்ட, 5வது பந்தில் ரன் ஏதும் கொடுக்காமல் அசத்தினார் ஃபருக்கி. 1 பந்துக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தநிலையில், கடைசி பந்தை ஃபுல்டாசாக வீச அதை சிக்சருக்கு பறக்கவிட்டார் ஸ்டப்ஸ். இதன்மூலம் மீண்டும் ஆட்டம் சமனாகி அடுத்த சூப்பர் ஓவருக்கு சென்றது.
இரண்டு அணி வீரர்களும் போராடி விளையான்ட நிலையில் யாருக்கு வெற்றி கிட்டும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில் 2வது சூப்பர் ஓவர் நடைபெற்றது.
2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் ஸ்டப்ஸ் மற்று மில்லர் களமிறங்கினர். ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மதுல்லா ஓமர்சாய் பந்துவீச ஸ்டப்ஸ் ஒரு சிக்சர், மில்லர் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 23 ரன்களை சேர்த்தனர்.
24 ரன்கள் அடித்தால் வெற்றி என்று விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபியும், அஸ்மத்தும் களமிறங்கினர். தென்னாப்பிரிக்கா அணி எதிர்பாராவிதமாக ஸ்பின்னர் மஹாராஜ் கையில் பந்தை கொடுத்தது. முதல் பந்தை எதிர்கொண்ட நபி ரன் ஏதும் எடுக்காத நிலையில் டாட் பால் ஆனது. அடுத்த பந்தில் நபியை அவுட்டாக்கிய மஹாராஜ் சௌத் ஆப்பிரிக்காவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார் என நினைத்த நிலையில், கடைசி 4 பந்துக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட ஆட்டத்தில் அனல்பறந்தது. கடைசி 1 பந்துக்கு 6 ரன்கள் என்ற நிலையில், அழுத்தத்தில் கடைசி பந்தை ஒயிடாக வீசினார் மஹாராஜ்.
சிக்சர் அடித்தால் வெற்றி, பவுண்டரி அடித்தால் அடுத்த சூப்பர் ஓவர் என மீண்டும் ஆட்டம் சுவரசியமான நிலையில், கடைசி பந்தை ஒயிடு யார்க்கர் லென்ந்தில் வீசிய மஹாராஜ் தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றியை உறுதி செய்தார்.
தோல்விக்கு பின் 84 ரன்கள், சூப்பர் ஓவரில் 3 சிக்சர்கள் அடித்து போராடிய குர்பாஸ் கண்ணீர்விட்டு அழுதார் இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அவரை தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆறுதல் படுத்தினார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்து 2 சூப்பர் ஓவர்களை கடந்த ஒரே போட்டி இதுவாக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டது.








