பிரேசில் லெஜெண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க கால்பந்து காட்சிப்போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. Football Plus இந்தியா அகாடமியும், பிரேசில் கால்பந்து அகாடமியும் இணைந்து இந்த காட்சிப்போட்டியை நடத்துகின்றன.
Football Plus இந்தியா சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் சர்வதேச அளவிலான கால்பந்து உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் 2002 உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி வீரர்கள் பங்கேற்று கலந்துரையாடவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு முன்னதாக பிரேசில் லெஜண்ட்ஸ் அணி நட்சத்திர வீரர் ரொனால்டினோ தலைமையில் காட்சிப்போட்டியில் பங்கேற்கின்றனர். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் பிரேசில் லெஜண்ட் அணியில் ரொனால்டினோ, ரிவால்டோ, கில்பர்ட் சில்வா, கஃப், உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே பிள்ள இந்திய அணியில் ஜாம்பவான் வீரர்களான விஜயன், வெங்கடேசன், மோகன் ராஜ், தர்மராஜ், கரன்சித் சிங், ஹுசைன், உள்ளிட்டோர் விளையாடவுள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த போட்டி இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.