2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது, எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து மதராஸா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் இது குறித்து முறையிட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர் அணியினருடன் சேர்ந்து நடுவர் வீராங்கனை தாக்கியதாக சொல்லப்படுகிறது.இதனால் இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு நாற்காலிகளை தூக்கி சண்டையிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் குறித்து தெரிய வந்தவுடன் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடனடியாக அங்குள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு அங்கு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் முதலமைச்சர் எடுக்க சொல்லி இருக்கிறார்.
போட்டி நடக்கும்போது பாயிண்ட் தொடர்பாக சிறிய மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த இரு அணிகளுக்கு இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் பதட்டமான சூழல் நிலவியது, அதை தான் சோசியல் மீடியாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் வீடியோவாக வந்திருக்கிறது. இன்று நம்முடைய வீராங்கனைகள் அனைவரையும் பதிண்டாவிலிருந்து டெல்லி அழைத்துச் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் கிளம்பி விட்டார்கள்.
பயிற்றுனர் பாண்டியராஜனும் காவல்துறை விடுவித்து இருக்கிறார்கள். இன்று வீராங்கனைகள் அனைவரையும் நள்ளிரவில் டெல்லி சென்று அங்கே தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு வசதி எல்லாம் முதலமைச்சர் உடைய உத்தரவுபடி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது..
உடன் சென்ற உடற்கல்வி இயக்குனர் கலையரசி உடன் தொலைபேசியில் பேசினேன். எந்தவிதமான பதட்டமான சூழ்நிலையும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று கூறினார். எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், வதந்திகளை பரப்ப வேண்டாம். மாணவர்களுக்குள் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. யாருக்கும் பெரிய அடி இல்லை, சிறிய சிறிய சிராய்ப்புகள் தான் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்"என்று கூறினார்.