விளையாட்டு

“அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்கவேண்டும்” - பேட்மிண்டன் வீரர் உருக்கம் !

மகாராஷ்டிரா அரசு அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்கவேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராங் ஷெட்டி கூறியுள்ளார்.

 “அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்கவேண்டும்” - பேட்மிண்டன் வீரர் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் முன்னேறின. வலுவான இரண்டு அணிகள் மோதிய போட்டியில் யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.

எனினும் அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் இந்தியா திரும்பியப்போது, அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மும்பையில் 2 கிலோ மீட்டருக்கு வெற்றிகொண்டாட்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இந்திய அணியின் வெற்றிகொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் பி.சி.சி.ஐ சார்பில் வீரர்களுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.

 “அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்கவேண்டும்” - பேட்மிண்டன் வீரர் உருக்கம் !

அந்த விழாவில் உலகக்கோப்பை வெற்ற வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுதொகை 125 கோடியை பி.சி.சி.ஐ வழங்கியது. மேலும் உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த மகாராஷ்டிர வீர்ரகளுக்கு மாநில அரசு சார்பில் 1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்கவேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராங் ஷெட்டி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ நாங்கள் பேட்மிண்டன் போட்டியில் தாமஸ் கோப்பையை வென்றோம். தாமஸ் கோப்பை உலகக்கோப்பைக்கு இணையானதுதான்.

அந்த தொடரில் ஒருமுறைகூட இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாத நிலையில், 2022-ல் தாமஸ் கோப்பையை வென்று சாதனை படைத்தோம். ஆனால் எங்களுக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. நான் கிரிக்கெட் வீரர்களை பற்றி சொல்லவில்லை. ஆனால் மகாராஷ்டிரா அரசு அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories