விளையாட்டு

"இது எல்லாம் ஒரு அணியே அல்ல" - பாகிஸ்தானை விமர்சித்தாரா கேரி கிர்ஸ்டன் ? உண்மை நிலை என்ன ?

"இது எல்லாம் ஒரு அணியே அல்ல" - பாகிஸ்தானை விமர்சித்தாரா கேரி கிர்ஸ்டன் ? உண்மை நிலை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி நியூயார்க்கில் உள்ள Nassau County சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றிபெறும் நிலையில் இருந்தது.

அந்த அணிக்கு கடைசி 8 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால் அதன்பின்னர் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்று குரூப் பிரிவில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

"இது எல்லாம் ஒரு அணியே அல்ல" - பாகிஸ்தானை விமர்சித்தாரா கேரி கிர்ஸ்டன் ? உண்மை நிலை என்ன ?

அதனைத் தொடர்ந்து கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றாலும் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறியது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணி குறித்து பேசியிருக்கும் அந்நாட்டு பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை. அந்த அணியெல்லாம் ஒரு அணியே இல்லை. வீரர்கள் அனைவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். நான் பல குழுக்களுடன் வேலை செய்திருக்கிறேன், ஆனால் நான் இதுபோலான ஒரு சூழ்நிலையை பார்த்ததில்லை” என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் கேரி கிர்ஸ்டன் அப்படி ஏதும் பேசவில்லை என்றும், கேரி கிர்ஸ்டன் கூறியதாக ஒரு முக்கிய நிர்வாகி ஊடகங்களிடம் கூறிய செய்தியே வெளியானது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. எனினும் கேரி கிர்ஸ்டன் உண்மையில் அவ்வாறு கூயிருப்பர் என்றும், பாகிஸ்தான் அணி அந்த விமர்சனத்துக்கு தகுதியான அணிதான் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories