விளையாட்டு

"2007 T20 உலகக்கோப்பை இறுதியில் தோனி இதைத்தான் செய்வார் என தெரியும்" - மிஸ்பா-உல்-ஹக் கருத்து !

கடைசி ஓவரில் ஸ்பின்னருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சளாரை பயன்படுத்திய தோனியின் முடிவு மிகவும் சரியானது எனமிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார்.

"2007 T20 உலகக்கோப்பை இறுதியில் தோனி இதைத்தான் செய்வார் என தெரியும்" - மிஸ்பா-உல்-ஹக் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. அதிலும் இளம்வீரர்களை கொண்டு முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது பெரும் சாதனையாக கொண்டாடப்படுகிறது.

அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை சந்தித்தது. அதில் இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா களத்தில் இருந்தார். அப்போது இறுதி ஓவரை அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் வீசுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தோனி ஜோகிந்தர் சர்மாவுக்கு வாய்ப்பை வழங்கினார். அந்த ஓவரில் இறுதி விக்கெட்டாக மிஸ்பா ஆட்டமிழக்க இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.

"2007 T20 உலகக்கோப்பை இறுதியில் தோனி இதைத்தான் செய்வார் என தெரியும்" - மிஸ்பா-உல்-ஹக் கருத்து !

இந்த நிலையில், கடைசி ஓவரில் ஸ்பின்னருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சளாரை பயன்படுத்திய தோனியின் முடிவு மிகவும் சரியானது என அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "கடைசி ஓவரை கண்டிப்பாக ஒரு ஸ்பின்னர் வீச மாட்டார் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் மைதானத்தின் பவுண்டரி அளவு சிறியதாக இருந்தது. ஒருவேளை ஸ்பின்னர் வீசியிருந்தால் நான் எளிதாக பவுண்டரி அடித்திருப்பேன்.

நான் எதிர்பார்த்தது போலவே தோனி ஸ்பின்னரை வீசவைக்காமல் சரியாக முடிவெடுத்தார். அது கடைசி விக்கெட் என்பதால் கடைசி ரன்னில் கூட இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. அப்போது இந்தியாவிடம் ஜோகிந்தர் சர்மா மட்டுமே இருந்தார். ஒரு வகையில் அதற்கு நானும் தாயாராக இருந்தேன்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories