விளையாட்டு

உலகக்கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வு எல்லாம் அளிக்கமுடியாது - மும்பை பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து !

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான பொல்லார்ட்டிடம் உலகக்கோப்பை தொடருக்காக பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

உலகக்கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வு எல்லாம் அளிக்கமுடியாது - மும்பை பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.

சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். அதோடு ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

உலகக்கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வு எல்லாம் அளிக்கமுடியாது - மும்பை பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து !

அதனைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பும்ராவுக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த முறை அவரின் காயங்கள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தற்போதும் அவரின் காயம் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான பொல்லார்ட்டிடம் உலகக்கோப்பை தொடருக்காக பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "எல்லாரும் இங்கே முழு ஐபிஎல் தொடர் விளையாடுவதற்காக தான் வந்திருக்கிறோம். எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. அது முடிந்தபின்னர்தான் ஒரு வீரருக்கு ஓய்வளிப்பது குறித்து யோசனை செய்ய முடியும்.

இதே உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் ஓய்வளித்து இருந்தால் நீங்கள் எங்களிடம் வேறு விதமாக கேள்வி கேட்பீர்கள். ஏன் உங்களுக்கு உலகக் கோப்பை தான் முக்கியமா? ஐபிஎல் முக்கியம் இல்லையா? என்று கூட கேட்பீர்கள். எனவே மே 17ஆம் தேதியோடு அனைத்தும் முடிந்து விடும். இதனால் அனைத்து வீரர்களும் ஓய்வெடுத்து விட்டு உலக கோப்பை தொடரில் பங்கு பெறலாம்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories