விளையாட்டு

அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !

ரன் குவிக்காத வீரருக்காக சிறப்பாக ஆடும் ரிங்கு சிங்கை தேர்வுக்குழு புறக்கணித்தது தவறான முடிவு என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த போட்டியில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.

அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !

இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அதன் பின்னர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். இதனால் அடுத்து மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் அவர் இடம்பிடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ரிங்கு சிங்குவுக்கு உலகக்கோப்பை அணியில் இடம் வழங்கப்படாததை குறிப்பிட்டு பலரும் தேர்வு குழுவை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ரன் குவிக்காத வீரருக்காக சிறப்பாக ஆடும் ரிங்கு சிங்கை தேர்வுக்குழு புறக்கணித்தது தவறான முடிவு என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், " சமீப ஆண்டுகளாக ரிங்கு சிங் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் அவர் நட்சத்திர வீரர் இல்லை என்பதால் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. இதுவே சூர்யகுமார் இந்த ஐபிஎல் தொடரில் ரன் குவிக்கவில்லை. ஆனால், அவரை அணியில் தேர்வு செய்து தான் ஆக வேண்டும் என தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரிங்கு சிங்கை விட சூர்யகுமார் யாதவ் அனுபவ வீரர் என்பதோடு, அவர் செல்வாக்கு கொண்ட வீரர் என்பதால் ரிங்கு சிங்குக்கு பதில் அவர் தேர்வாகியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories