விளையாட்டு

பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !

ஹர்திக் பாண்டியா பரிமாற்றத்தின் மூலம் இரண்டு அணிகளின் சமநிலையும் குலைந்து இரு அணிகளையும் வீழ்த்திவிட்டது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !

அதனைத் தொடர்ந்து தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வரும் நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மான் கில் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு குஜராத் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், மும்பை அணி ப்பிளே ஆஃப்-க்கு சென்றிருந்தது. ஆனால் தற்போதைய நிலையில், மும்பை கடைசி இடமும், குஜராத் 9-வது இடத்திலும் உள்ளது.

இதனை குறிப்பிட்டு ஹர்தீக் பாண்டியா பரிமாற்றத்தின் மூலம் இரண்டு அணிகளின் சமநிலையும் குலைந்து இரு அணிகளையும் வீழ்த்திவிட்டது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பொதுவாக ஐபிஎல் ஏலத்தின் போது அந்த அணிகளின் தேவைக்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால், மும்பை அணி விடாப்பிடியாக ஹர்திக் பாண்டியாவை பரிமாற்ற முறையில் வாங்கியது இறுதியில் அந்த அணிக்கே பாதகமாக சென்றுள்ளது.

banner

Related Stories

Related Stories