விளையாட்டு

42 வயதிலும் ருத்ரதாண்டவம் ஆடிய தோனி : சென்னை அணி தோற்றாலும் கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள் !

ஐபிஎல் தொடரில் சென்னை அணி தோல்வியைத் தழுவினாலும், தோனியின் அதிரடியை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடினர்.

42 வயதிலும் ருத்ரதாண்டவம் ஆடிய தோனி : சென்னை அணி தோற்றாலும் கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், ப்ரித்விஷா ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். வார்னர் 52 ரன்கள் குவித்தும், ப்ரித்விஷா 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 52 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தனர். சென்னை தரப்பில் பதிரனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் ஆடிய சென்னை அணியில் கேப்டன் கெய்க்வாட் 1 ரன்னுக்கும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

42 வயதிலும் ருத்ரதாண்டவம் ஆடிய தோனி : சென்னை அணி தோற்றாலும் கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள் !

இதனால் பின்னர் வந்த வீரர்கள் குறிப்பிடத்தக்க ரன்கள் குவித்தாலும், யாரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படாததால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இந்த சூழலில் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசி அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், வேகப்பந்துவீச்சாளர் நோர்கியா வீசுய இறுதி ஓவரில் மட்டும் 20 ரன்கள் விளாசினார். மொத்தமாக 16 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் விளாசினார். இறுதியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும், தோனியின் இந்த அதிரடியை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் சென்னை அணி வெற்றிபெற்றது போல ஒரு தோற்றம் மைதானம் முழுக்க நிலவியது.

banner

Related Stories

Related Stories