விளையாட்டு

"என் வாழ்வின் திரும்புமுனையாக மாறிய அந்த நாள்" -CSK குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அஸ்வின் !

நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டே இருக்கும் என அஸ்வின் கூறியுள்ளார்.

"என் வாழ்வின் திரும்புமுனையாக மாறிய அந்த நாள்" -CSK குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அஸ்வின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் ஐசிசி தலைவர் சீனிவாசன், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் நிகழ்த்திய சாதனையை பாராட்டி ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

மேலும், அவரது சாதனையை குறிக்கும் விதமாக 500 தங்கக் காசுகள் பொறித்த 500 என எழுதப்பட்ட கேடயமும் வழங்கப்பட்டது. மேலும், அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்க தொகையை தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் என்.சீனிவாசன் வழங்கினார்.

"என் வாழ்வின் திரும்புமுனையாக மாறிய அந்த நாள்" -CSK குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அஸ்வின் !

இந்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், "2008யில் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. பல கோடிகள் முதலீட்டுடன் சென்னை அணி உள்ளே இறங்கியது. அந்த அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது நான், இந்தியா சிமெண்டிற்கு எதிரான போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன்.

அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில், அஸ்வினை CSK அணியில் எடுக்கிறோம் தானே? எடுத்துவிட்டீர்களா? என கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சென்னை அணி நிர்வாகி ஒருவரை கேட்டுவிட்டார். அங்கிருந்து தான் எனது பயணம் தொடங்கியது.

அதன்பின்னர் 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை அணியில் சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. தோனி எனக்கு பல வாய்ப்புகளை வழங்கி என்னை எல்லா வழியிலும் ஊக்கப்படுத்தினார். நான் தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு இந்த இடம் எனக்கு முக்கியமானது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories