விளையாட்டு

"தொடர் செல்ல செல்ல இந்திய அணியை கண்டு பயந்தோம்" - இங். பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் ஒப்புதல் !

இந்திய அணியை கண்டு கொஞ்சம் பயப்படத் தொடங்கினோம் என இங்கிலாந்து அணி பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

"தொடர் செல்ல செல்ல இந்திய அணியை கண்டு பயந்தோம்" - இங். பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் ஒப்புதல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஷஸ் தொடரில் bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

பின்னர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் bazball முறையில் ஆடி இங்கிலாந்து அணி வென்றது. இதனால் அடுத்து வரும் இந்திய தொடரிலும் bazball முறை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. ஆனால், அடுத்த நன்கு போட்டிகளிலும் மோசமான முறையில் ஆடி இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது.

"தொடர் செல்ல செல்ல இந்திய அணியை கண்டு பயந்தோம்" - இங். பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் ஒப்புதல் !

இந்த நிலையில், இந்திய அணியை கண்டு கொஞ்சம் பயப்படத் தொடங்கினோம் என இங்கிலாந்து அணி பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "சில நேரங்களில் நீங்கள் உங்கள் தவறுகளில் இருந்து தப்பித்தாலும், கடைசி கட்டத்தில் உங்கள் தவறுகள் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கும்போது எதுவும் செய்ய முடியாது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் தொடர் போகப்போக நாங்கள் இந்திய அணியை கண்டு கொஞ்சம் பயப்படத் தொடங்கினோம். இந்திய வீரர்கள் எங்களுக்குத் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் எங்களுக்கு அதீத நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.

ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடந்த போட்டிகளில் நாங்கள் அதீத நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டோம். நாங்கள் அந்தப் போட்டிகளில் ஒருகட்டத்தில் நல்ல நிலைமையில் தான் இருந்தோம். அதை எங்களால் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. இந்திய வீரர்கள் தங்களது அணுகுமுறை மூலம் எங்களைப் பின்தங்கவைத்துவிட்டார்கள்.

இதுவரை நாங்கள் நம்பியிருந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு ஏதோ ஒன்றைத் தேடிப் போனால் அது முட்டாள்தனமாக இருக்கும். நானும் அணியின் கேப்டனும் எங்கள் அணுகுமுறையில் மிகவும் திடமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம். அதிலிருந்து நாங்கள் பின்வாங்குவதாக இல்லை. அதை நாங்கள் நிச்சயம் மேம்படுத்த முயற்சி செய்வோமோ தவிர, அதிலிருந்து பின்வாங்கமாட்டோம்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories