விளையாட்டு

மீண்டும் சர்ச்சையில் BCCI : மகளிர் IPL அட்டவணையை தாமதமாக வெளியிட்டதாக புகார்... பின்னணி என்ன ?

இங்கிலாந்து, நியூசிலாந்து அணி வீராங்கனைகள் இறுதிக்கட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மீண்டும் சர்ச்சையில் BCCI : மகளிர் IPL அட்டவணையை தாமதமாக வெளியிட்டதாக புகார்... பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

இதில் மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் இந்த ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் தொடரின் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த தொடர் வரும் பிப்ரவரி 23 முதல் மார்ச் 17 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் BCCI : மகளிர் IPL அட்டவணையை தாமதமாக வெளியிட்டதாக புகார்... பின்னணி என்ன ?

ஆனால், இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் மார்ச் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மகளிர் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணி வீராங்கனைகள் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது.

மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 17 -ம் தேதி முடியவுள்ளது. அதன் பின்னர் இங்கிலாந்து, நியூசிலாந்து அணி வீராங்கனைகள் அடுத்த இரண்டு நாட்களில் அவர்களின் தேசிய அணியில் இணையமுடியாது என்பதால் இங்கிலாந்து, நியூசிலாந்து அணி வீராங்கனைகள் இறுதிக்கட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

அதே நேரம் இந்த சிக்கலுக்கு காரணம் பிசிசிஐ அமைப்புதான் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. மகளிர் ஐபிஎல் தொடரின் அட்டவணையை முன்னரே வெளியிட்டு இருந்தால் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளை மாற்றியமைத்திருக்க முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories