விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடர்: விராட் , ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை !

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடர்: விராட் , ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில், அந்த தொடருக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

சமிபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கூட இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணியே பங்கேற்றது. இதனால் இந்தியில் அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த உலகக்கோப்பை டி20 தொடர் வரை விளையாட முடிவு செய்ததாக கூறப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடர்: விராட் , ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை !

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜனவரி 11, 14, 17 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்து விளையாடவுள்ளது.

இந்த தொடருக்கான அணியில் சஞ்சுசாம்சனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சிவன் துபேவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , அவேஷ் கான், முகேஷ் குமார்

banner

Related Stories

Related Stories