விளையாட்டு

"இவர் இந்திய அணிக்காக 10 முதல் 15 ஆண்டுகள் விளையாடும் வீரர்" - தமிழ்நாடு வீரரை பாராட்டிய இர்பான் பதான் !

சாய் சுதர்சன் இந்திய அணிக்காக குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.

"இவர் இந்திய அணிக்காக 10 முதல் 15 ஆண்டுகள் விளையாடும் வீரர்" - தமிழ்நாடு வீரரை பாராட்டிய இர்பான் பதான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அறிமுகமானார். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய அந்த அணி 27.3 ஓவர்களில் வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கடைசி வரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்களை விளாசினார்.

இந்த போட்டியில் அரைசதம் எடுத்த சாய் சுதர்சன் அறிமுகப்போட்டியிலேயே அரைசதம் விளாசிய 17-வது இந்திய வீரர் என்ற பெருமையையும், அறிமுகப்போட்டியிலேயே அரைசதம் விளாசிய முதல் தமிழ்நாடு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வெளிநாட்டு ஆடுகளங்களில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

"இவர் இந்திய அணிக்காக 10 முதல் 15 ஆண்டுகள் விளையாடும் வீரர்" - தமிழ்நாடு வீரரை பாராட்டிய இர்பான் பதான் !

இந்த நிலையில், சாய் சுதர்சன் இந்திய அணிக்காக குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் இவ்வளவு சிறப்பாக ஒரு இளம் வீரரால் பேட் செய்ய முடிகிறது என்றால், இந்திய அணிக்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஆட கூடிய வீரராகத்தான் அவர் இருப்பார். அப்படி ஒருவரை இந்திய அணி கண்டுபிடித்துவிட்டது என்றுதான் அதற்கு அர்த்தம்.

ஒரு போட்டியில் ஒருவரை முழுதாக அறிந்து கொள்ள முடியாது என்றாலும், அவர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தொடங்கினார், ஷார்ட் பால்களை நன்றாக எதிர்கொள்கிறார், கால்களை நகர்த்தி விளையாடும் திறமை கொண்டுள்ளார். ஸ்பின்னர்களை ஸ்வீப் ஷாட் ஆடுகிறார், ஒருவேளை வேகப்பந்துவீச்சாளர் ஸ்லோயர் பால்களை வீசினால் ஸ்டப் டவுன் செய்து பந்தை விளாச தெரிகிறது. இதன் மூலம் அவர் கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொண்டுள்ளார் என்பது தெரிகிறது " என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories