விளையாட்டு

“ரோஹித் சர்மாவின் செயல்பாடு குறைந்ததே அவரின் கேப்டன் பதவி பறிபோக காரணம்” - கவாஸ்கர் கருத்து !

ரோஹித் சர்மாவின் சமீபத்திய செயல்பாடுகள் குறைந்திருப்பதாலேயே அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

“ரோஹித் சர்மாவின் செயல்பாடு குறைந்ததே அவரின் கேப்டன் பதவி பறிபோக காரணம்” - கவாஸ்கர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதில் மேலும் அதிக வருவாய் ஈட்டவேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

“ரோஹித் சர்மாவின் செயல்பாடு குறைந்ததே அவரின் கேப்டன் பதவி பறிபோக காரணம்” - கவாஸ்கர் கருத்து !

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக கருதப்பட்டார். இதனிடையே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், விரைவில் ரோஹித் சர்மாக்கு பதில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா வரும் முன்னர் மும்பை அணி ஒரு கோப்பையை கூட வெல்லாத நிலையில், அந்த அணிக்கு 5 கோப்பைகளை ரோஹித் வென்றுகொடுத்தார். ஆனால், அப்படிப்பட்ட வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போதே ஐபிஎல் தொடரில் இருந்து கேப்டனாக நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த அணியை மும்பை ரசிகர்கர் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் சமீபத்திய செயல்பாடுகள் குறைந்திருப்பதாலேயே அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

“ரோஹித் சர்மாவின் செயல்பாடு குறைந்ததே அவரின் கேப்டன் பதவி பறிபோக காரணம்” - கவாஸ்கர் கருத்து !

இது குறித்துப் பேசிய அவர், “ரோஹித் சர்மாவின் விவகாரத்தில் இந்த முடிவு அணிக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், நாம் சரி, தவறு என்று எதையும் பார்க்கக்கூடாது. ரோஹித் சர்மாஅதிரடியாக ரன்களைக் குவிப்பவர். ஆனால், கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் குறைந்திருக்கின்றன. இதன் காரணமாகத்தான் கடந்த 3 வருடத்தில் மும்பை 9-வது, 10-வது இடத்தைப் பிடித்திருந்தது. கடந்த வருடம் மட்டும் போராடி பிளேஆஃப் வரை மட்டுமே சென்றது.

ரோஹித் சர்மா இந்திய அணிக்கும், ஐபிஎல் தொடரிலும் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தொடர்ச்சியாக விளையாடியதால் சற்று களைப்படைந்திருக்கலாம். மறுபுறம் குஜராத்துக்கு முதல் வருடம் கோப்பையை வென்ற பாண்டியா 2வது வருடமும் ஃபைனல் வரை அழைத்துச் சென்றதால்தான் மும்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பைக்கும் தற்போது புதுமையாகச் சிந்திக்கக் கூடிய ஒருவர் தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories