விளையாட்டு

ஒரே நாளில் 1.5 லட்ச Followers-ஐ இழந்த மும்பை இந்தியன்ஸ் : MI-யின் ஒரே முடிவால் CSKவுக்கு அடித்த யோகம் !

மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டா பக்கத்தை ஒரே நாளில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.

ஒரே நாளில் 1.5 லட்ச Followers-ஐ இழந்த மும்பை இந்தியன்ஸ் : MI-யின் ஒரே முடிவால்  CSKவுக்கு அடித்த யோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதில் மேலும் அதிக வருவாய் ஈட்டவேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

ஒரே நாளில் 1.5 லட்ச Followers-ஐ இழந்த மும்பை இந்தியன்ஸ் : MI-யின் ஒரே முடிவால்  CSKவுக்கு அடித்த யோகம் !

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக கருதப்பட்டார். எனினும் கடந்த ஆண்டு அவருக்கும் குஜராத் அணி நிர்வாகத்துக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதனால் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் ஒரு அணிக்கு கேப்டனாக இருக்கும் ஒருவர் மற்றொரு அணியில் சாதாரண வீரராக எப்படி விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. மேலும், விரைவில் ரோஹித் சர்மாக்கு பதில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

ஒரே நாளில் 1.5 லட்ச Followers-ஐ இழந்த மும்பை இந்தியன்ஸ் : MI-யின் ஒரே முடிவால்  CSKவுக்கு அடித்த யோகம் !

அதனைத் தொடர்ந்து நேற்று மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா வரும் முன்னர் மும்பை அணி ஒரு கோப்பையை கூட வெல்லாத நிலையில், அந்த அணிக்கு 5 கோப்பைகளை ரோஹித் வென்றுகொடுத்தார். ஆனால், அப்படிப்பட்ட வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போதே ஐபிஎல் தொடரில் இருந்து கேப்டனாக நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மும்பை ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அந்த அணியை ரோஹித் சர்மா ரசிகர்கள் பின்தொடர்வதை தொடர்ந்து நிறுத்தி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டா பக்கத்தை ஒரே நாளில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணியாக சென்னை அணி மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories