விளையாட்டு

"தோனி 20 கிலோ குறைக்கச்சொன்னார், ஆனால் இவர் 5 கிலோ கூடிவிட்டார்" - ஆப்கான் அணி முன்னாள் கேப்டன் கிண்டல் !

"தோனி 20 கிலோ குறைக்கச்சொன்னார், ஆனால் இவர் 5 கிலோ கூடிவிட்டார்" - ஆப்கான் அணி முன்னாள் கேப்டன் கிண்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

பெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.

"தோனி 20 கிலோ குறைக்கச்சொன்னார், ஆனால் இவர் 5 கிலோ கூடிவிட்டார்" - ஆப்கான் அணி முன்னாள் கேப்டன் கிண்டல் !

இதனால் பல்வேறு நாட்டு வீரர்களும் சென்னை அணியில் விளையாட ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில், சென்னை அணியில் ஆடும் வாய்ப்பு குறித்தும் தோனியின் கீழ் ஆடுவது குறித்தும் சக ஆப்கான் வீரரின் விருப்பம் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆஸ்கர் ஆப்கன் கருத்து பகிர்ந்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், " ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் நான் தோனியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் ஆப்கான் தொடக்க வீரர் மொஹம்மது ஷசாத் சென்னை அணியில் விளையாட விரும்பும் இருப்பதாக அவரிடம் கூறினேன். அதற்கு அவரை 20 கிலோ எடை குறைக்க சொல்லுங்கள் . நான் அவரை ஐபிஎல் அணிக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று தோனி கூறினார். ஆனால், அதற்கு பின்னர் ஷசாத் மேலும் ஐந்து கிலோ எடை கூடிவிட்டார்" என்று கிண்டலாக கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories