விளையாட்டு

மோடி பெளலிங், அமித்ஷா பேட்டிங் : அகமதாபாத் மைதானத்திலும் அரசியல் செய்யும் பாஜக - சிவசேனா MP விமர்சனம்!

மோடி பெளலிங், அமித்ஷா பேட்டிங் : அகமதாபாத் மைதானத்திலும் அரசியல் செய்யும் பாஜக - சிவசேனா MP விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால், இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. வழக்கமாக மார்ச்சில் இருந்து மே வரையான காலகட்டத்தில்தான் உலகக்கோப்பை நடைபெறும். ஆனால், ஐபிஎல் காரணமாக பிசிசிஐ மழை காலமான அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பையை நடத்தியது.

அதேபோல உலகக்கோப்பையில் தொடக்க போட்டிக்கு வெகு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அந்த நாளில்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய போட்டி எந்தவித தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறாமல் மிகவும் எளிமையான நடத்தப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் யாரும் இன்று மைதானம் வெறிச்சோடு கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடி பெளலிங், அமித்ஷா பேட்டிங் : அகமதாபாத் மைதானத்திலும் அரசியல் செய்யும் பாஜக - சிவசேனா MP விமர்சனம்!

எனினும் ரசிகர்கள் மத்தியில் 2023 உலகக்கோப்பை பெரிய அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளானது. இந்த போட்டித்தொடரில் இந்திய அணி மொத்தம் 9 லீக் போட்டிகளில்இந்திய அணி அனைத்திலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிபோட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு இந்த போட்டிக்காக நிலவியுள்ளது. இந்த சூழலில் 2023 உலகக்கோப்பை போட்டியின் முக்கிய ஆட்டங்கள் அனைத்தும் அகமதாபாத்தில் அமைந்துள்ள மோடி மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. இது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது.

மோடி பெளலிங், அமித்ஷா பேட்டிங் : அகமதாபாத் மைதானத்திலும் அரசியல் செய்யும் பாஜக - சிவசேனா MP விமர்சனம்!

அதாவது இந்த போட்டித்தொடரின் முக்கிய ஆட்டமான இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய தொடக்க ஆட்டம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி என முக்கிய போட்டிகள் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விளையாட்டிலும் மோடியின் ஒன்றிய பாஜக அரசு அரசியலை கலந்துள்ளது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் வெளியே வரும்போது, அவரை எதிர்நோக்கி சில கும்பல் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷத்தை எழுப்பியது. மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விளையாட வந்த வீரர்களை அவமதிக்கும் வகையில் இழிவான செயல் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பிய நிலையில், பாஜகவினர் ஒருவர் கூட அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், விளையாட்டிலும் கூட மோடி அரசு அரசியல் செய்வதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்திலும் ஒரு அரசியல் இருக்கிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் அரசியலை கொண்டு வர தேவையில்லை; ஆனால் பாஜக அரசு அகமதாபாத்தில் அரசியலை செய்கிறது. பிரதமர் மோடி பந்துவீசுவார், அமித்ஷா பேட்டிங் செய்வார், பாஜக தலைவர்கள் எல்லையில் நிற்பார்கள்.

ஏன் பிரதமர் மோடி அங்கே இருந்ததால் தான் இந்தியா வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது என்றும் சொல்வார்கள். இந்த நாட்டில் எது வேண்டுமானாலும் சாத்தியம்." என்று கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories