விளையாட்டு

INDvsAUS: விமான கட்டணம் முதல் தங்கும் விடுதி வரை.. உலக கோப்பையால் எகிறிய விலை-எல்லாம் இந்த ஒரு நாளுக்காக!

INDvsAUS: விமான கட்டணம் முதல் தங்கும் விடுதி வரை.. உலக கோப்பையால் எகிறிய விலை-எல்லாம் இந்த ஒரு நாளுக்காக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டித்தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிபோட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதே போல மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் 10 தொடர் வெற்றியுடன் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதே நேரம் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி அடுத்த 8 போட்டிகளில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

INDvsAUS: விமான கட்டணம் முதல் தங்கும் விடுதி வரை.. உலக கோப்பையால் எகிறிய விலை-எல்லாம் இந்த ஒரு நாளுக்காக!

இதன் காரணமாக இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை இந்தியா 4-வது முறையும், ஆஸ்திரேலியா 8-வது முறையும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது .

இதனாலே இந்த முறை பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். இந்தியாவையும் தாண்டி, உலக நாடுகள் மத்தியிலும் இன்று நடைபெறும் போட்டியானது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை காண இன்று உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் அகமதாபாத்துக்கு பலரும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

INDvsAUS: விமான கட்டணம் முதல் தங்கும் விடுதி வரை.. உலக கோப்பையால் எகிறிய விலை-எல்லாம் இந்த ஒரு நாளுக்காக!

இந்த நிலையில் தற்போது விமான கட்டணம் முதல் தங்கும் விடுதி வரையிலான கட்டணங்கள் அதிகரித்து காணப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கு வழக்கமாக ரூ.12 ஆயிரம் வரை ஆகும். ஆனால் தற்போது பிரபலங்கள் முதல் அனைவரும் வருகை தருவதால், அங்கிருக்கும் விடுதிகளில் ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதோடு சாதாரண ரசிகர்கள் தங்கும் விடுதி கூட ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் மதுபானங்கள், உணவின் விலை, வாடகை கார், பைக்குகள், ஆட்டோ விலை என அனைத்தும் விலையுயர்ந்த காணப்படுகிறது. சென்னையில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் விமான கட்டணமும் தற்போது ரூ.28 ஆயிரம் வரை அதிகரித்தும், ஐதராபாத்திலிருந்து ரூ.30 ஆயிரமும், பெங்களூரிலிருந்து ரூ.29 ஆயிரமும், டெல்லியில் இருந்து ரூ.22 ஆயிரமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

INDvsAUS: விமான கட்டணம் முதல் தங்கும் விடுதி வரை.. உலக கோப்பையால் எகிறிய விலை-எல்லாம் இந்த ஒரு நாளுக்காக!

இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினும், இன்று ஒரு நாள் மட்டும் தானே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு தருணத்திற்காக காத்திருக்கும் ரசிகர்ளுக்கு இது பெரிய பொருட்டாவே தெரியவில்லை. ரசிகர்களின் இந்த ஆர்வம், வீரர்களுக்கு உற்சாகமூட்டுகிறது.

இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரிலேயா அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை காண, பிரதமர் மோடி, அமித் ஷா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8-க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் என பலரும் வருகை தரவுள்ளனர்.

அதோடு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் வருகை தரவுள்ளார். எனவே பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக இந்தியாவில் பல்வேறு பகுதிளில் ரசிகர்கள் ஆவலுடன் டி.வி முன்னாள் காத்திருக்கின்றனர். அகமதாபாத் முழுவதும் பல்வேறு இடங்களில் லைட் போட்டு விழா போன்று உள்ளது. சென்னை மெரினா கடற்கரையிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக போட்டியை காண பெரிய எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories