விளையாட்டு

ஐஸ்வர்யா ராய் குறித்த அவதூறு கருத்து - பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பாக். முன்னாள் வீரர் ! பின்னணி என்ன ?

ஐஸ்வர்யா ராய் குறித்த கேவலமான கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் குறித்த அவதூறு கருத்து - பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பாக். முன்னாள் வீரர் ! பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷ் நியூஸிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியது.

பின்னர் தனது இறுதி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த தோல்வி காரணமாக பல்வேறு முன்னாள் வீரர்களும் அந்த அணியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அப்துல் ரசாக், ஷாகித் அப்ரிடி, உமர் குல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் குறித்த அவதூறு கருத்து - பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பாக். முன்னாள் வீரர் ! பின்னணி என்ன ?

இந்த நிகழ்ச்சியில் பேசிய அப்துல் ரசாக் "இப்போதைய அணி கட்டமைப்பே சரியில்லை. இதன் காரணமாக பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் கூட எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது. அது போலத்தான் பாகிஸ்தான் அணியும்" என்று கூறினார்.

இவரின் இந்த கேவலமான கருத்துக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தனது மோசமான கருத்துக்கு அப்துல் ரஸாக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய் தவறி குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories