விளையாட்டு

"இது உங்கள் ஊரில் நடக்கும் உள்ளூர் தொடர் அல்ல, உலகக்கோப்பை தொடர்" - பாக். முன்னாள் வீரரை விமர்சித்த ஷமி!

"இது உங்கள் ஊரில் நடக்கும் உள்ளூர் தொடர் அல்ல, உலகக்கோப்பை தொடர்" - பாக். முன்னாள் வீரரை விமர்சித்த ஷமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஆனால், இந்திய அணியின் இந்த சாதனையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராசா என்பவர், இந்த தொடரில் ஐசிசி சார்பில் இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்துகளில் அதிக ஸ்விங் மற்றும் சீம் கிடைக்கிறது. ஐசிசி இந்தியாவுக்கு வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து உதவி செய்கிறது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது இந்திய வீரர் மொஹம்மது ஷமியும் ஹசன் ராசாவை விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இதுபோன்ற கருத்துக்களைக் கூற ஒரு கிரிக்கெட் வீரராக ஹசன் ராசா வெட்கப்பட வேண்டும்.அவர் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை என்றால் புகழ்பெற்ற பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுவதையாவது கேட்க வேண்டும் .

"இது உங்கள் ஊரில் நடக்கும் உள்ளூர் தொடர் அல்ல, உலகக்கோப்பை தொடர்" - பாக். முன்னாள் வீரரை விமர்சித்த ஷமி!

மற்ற அணி வீரர்கள் சிறப்பாக செயல்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துகொள்ளுங்கள். நீங்கள் கூறுவது போல் நடக்க இது உங்கள் உள்ளூர் தொடர் அல்ல, ஐசிசி உலகக்கோப்பை தொடர்" என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் "மைதானத்தில் நடுவர்கள் , பார்வையாளர்கள் என பல பேர் இருக்கும் போது இவ்வாறு இப்படி செய்ய முடியும். பந்தை நன்றாக ஸ்விங் செய்ய வைக்கும்படி எந்த ஒரு தொழில்நுட்பமும் இதுவரை வரவில்லை. இந்திய பவுலர்கள் தற்போது உலகத்திலே சிறந்து விளங்குகிறார்கள். அவர்களிடம் திறமை இருக்கிறது. இதனால் தான் அவர்கள் மற்ற பவுலர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்"என்று கூறியிருந்தார்.

banner

Related Stories

Related Stories