விளையாட்டு

"நாங்கள் மட்டும் லாக் டவுனில் இருப்பதே எங்களுக்கு பின்னடைவு" - தோல்விக்கு புதிய காரணம் கூறிய பாகிஸ்தான் !

ஐபிஎல் தொடரில் ஆடாமல் இத்தகைய இந்த மைதானங்களில் விளையாடுவது எங்களுடைய வீரர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.

"நாங்கள் மட்டும் லாக் டவுனில் இருப்பதே எங்களுக்கு பின்னடைவு" - தோல்விக்கு புதிய காரணம் கூறிய பாகிஸ்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த தோல்வியோடு பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்து மோசமான நிலையில் இருக்கிறது. அதோடு அதன் பின்னர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக அந்த அணியை அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஆடாமல் இத்தகைய இந்த மைதானங்களில் விளையாடுவது எங்களுடைய வீரர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்தியாவில் நாங்கள் அதிகப்படியான பாதுகாப்புக்கு கீழ் இருக்கிறோம். நீங்கள் ஒரு தளத்திலும் உங்களுடைய அணியினர் மற்றொரு தளத்திலும் இருப்பதால் லாக்டவுன் சமயத்தில் இருந்தது போன்ற உணர்வு தெரிகிறது.

"நாங்கள் மட்டும் லாக் டவுனில் இருப்பதே எங்களுக்கு பின்னடைவு" - தோல்விக்கு புதிய காரணம் கூறிய பாகிஸ்தான் !

சாதாரணமாக எங்களுடைய வீரர்கள் சாலையில் இருந்து விரும்பிய இடங்களில் வெளியே சென்று உணவு சாப்பிடுவார்கள். ஆனால், இங்கு உணவு கூட தனி அரசியில் வழங்கப்படுகிறித்து. இத்தகைய நிலையில் இருப்பது வீரர்களுக்கு கடினமாக இருக்கிறது. நங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் வித்தியாசமான மைதானங்களில் நடைபெறுகிறது.

கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற மைதானங்களை ஐபிஎல் தொடரின்போது டிவியில் பார்த்திருக்கிறோம். அந்த மைதானத்தில் இப்போது விளையாடுவது வீரர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது.அதே எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் கால சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளாமல் முதல் முறையாக இந்த மைதானங்களில் விளையாடுவது எங்களுடைய வீரர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories