விளையாட்டு

"உங்கள் மீது மரியாதை இருக்கிறது" - மோசமான அணி என்று விமர்சித்த மோர்கனுக்கு இங்கிலாந்து வீரர் பதிலடி !

பார்த்ததில் மோசமான அணி என்று இங்கிலாந்து அணியை விமர்சித்த மோர்கனுக்கு இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் பதிலடி கொடுத்துள்ளார்.

"உங்கள் மீது மரியாதை இருக்கிறது" - மோசமான அணி என்று விமர்சித்த மோர்கனுக்கு இங்கிலாந்து வீரர் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது.

இந்த தொடரில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் கூட இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதோடு பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டு துறையிலும் அந்த அணி மோசமாக செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் பலர் இங்கிலாந்து அணியை மோசமாக விமர்சித்து வருகின்றனர். அண்ட் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக முதல் முறை உலகக்கோப்பையை வென்ற கேப்டன் இயான் மோர்கனும் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"உங்கள் மீது மரியாதை இருக்கிறது" - மோசமான அணி என்று விமர்சித்த மோர்கனுக்கு இங்கிலாந்து வீரர் பதிலடி !

இது குறித்துப் பேசிய அவர், " இந்த உலகக்கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அணி இங்கிலாந்து, ஆனால் அண்ட் அணியை போல் மோசமாக செயல்பட்டிருக்கும் அணியை பார்க்கமுடியாது. அவர்கள் பயன்படுத்தும் திட்டங்கள் அவர்களுக்கு தோல்விகளை கொண்டு வந்திருக்கிறது. இது நிச்சயமாக டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடம் இருக்கும் மன உறுதி மற்றும் நம்பிக்கை குறித்து கேள்விகளை எழுப்புகிறது" என்று கூறியிருந்தார்.

ஆனால், முன்னாள் கேப்டன் மார்கனின் இந்தியா கூற்றை இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் மறுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " எங்கள் அணியின் அனைவருக்கும் மோர்கன் மீது மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனால் அவர் கூறுவதுபோல ட்ரெஸ்ஸிங் ரூமில் தவறாக எதுவும் நடக்கவில்லை. இதனை நான் உறுதியாக அவருக்கு சொல்ல முடியும். தற்போது நாங்கள் டி20 கிரிக்கெட்டை விட 50 ஓவர் கிரிக்கெட்டை மிக குறைவாக ஆடுகிறோம். போதுமானவரையில் இந்த வடிவத்தில் விளையாடாததுதான் பிரச்சனைக்கு காரணம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories