விளையாட்டு

AFGvsPAK : மைதானத்தில் உச்சம் தொட்ட கொண்டாட்டம் ! துப்பாக்கி வெடித்து கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் !

உலகக்கோப்பை தொடரில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது.

AFGvsPAK : மைதானத்தில் உச்சம் தொட்ட கொண்டாட்டம் ! துப்பாக்கி வெடித்து கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் ஆடிப்பாடி கொண்டாடினர். மேலும், பேருந்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானிலும் இந்த வெற்றி மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. அங்கு துப்பாக்கியால் சுட்டும், வெடிகளை வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

சில ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், இந்த வெற்றியை உலகக்கோப்பை வென்றதைப் போன்ற உணர்வை தருவதாக கூறியுள்ளதில் இருந்தே ஆப்கானிஸ்தானின் இந்த கொண்டாட்ட உணர்வை அறிந்துகொள்ள முடியும். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இந்த வெற்றியை உணர்வுபூர்வமாக கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories